TNPSC Thervupettagam

தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை கணக்கின் வரவு சாராக் கடன்கள்

October 24 , 2025 12 days 60 0
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை கணக்கின் வரவு சாராக் கடன்கள் 3,919.10 கோடி ரூபாயாக இருந்தன என்று CAG அறிக்கை தெரிவிக்கிறது.
  • நிதிநிலை அறிக்கை கணக்கின் வரவு சாராக் கடன்கள் என்பது மாநிலப் பொதுத் துறை நிறுவனங்களால் எடுக்கப் பட்ட கடன்கள், ஆனால் மாநில நிதிநிலை அறிக்கை கணக்கின் மூலம் அவை திருப்பிச் செலுத்தப்படுவதால் மறைமுகமாக மாநிலக் கடன் பொறுப்புகளில் சேர்க்கப்படுகின்றன.
  • 2023 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் நிதிநிலை அறிக்கை கணக்கின் வரவு சாராக் கடன்கள் 2,298.54 கோடி ரூபாயாக இருந்தன.
  • இதில் நீர்வளங்களின் காப்பு மூலம் 1,591.53 கோடி ரூபாயும், நீர் மற்றும் சுகாதாரத் தொகுப்பு நிதி மூலம் 380.14 கோடி ரூபாயும் அடங்கும்.
  • 2025-26 ஆம் ஆண்டில் 1,62,096.76 கோடி ரூபாய் கடன் வாங்கி 55,844.53 கோடி ரூபாயைத் திருப்பிச் செலுத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
  • இதன் விளைவாக, 2026 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி நிலவரப்படி நிலுவையில் உள்ள கடன் 9,29,959.3 கோடி ரூபாயாக இருக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்