தமிழகத்தில் ஒரு நாடு, ஒரு ரேஷன் அட்டை (உணவுப் பொருள் வழங்கல் அட்டை) திட்டம்
February 5 , 2020 2021 days 811 0
மத்திய அரசின் ‘ஒரு நாடு, ஒரு ரேஷன் அட்டை’ (உணவுப் பொருள் வழங்கல் அட்டை) திட்டத்தை தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 அன்று ஒரு சோதனைத் திட்டமாக தமிழ்நாடு அரசு தொடங்கி உள்ளது.
இந்த இரண்டு மாவட்டங்களிலும் இந்த திட்டத்தின் செயல்பாடு குறித்து ஒரு மாத காலத்திற்கு தமிழ்நாடு அரசு ஆய்வு செய்ய இருக்கின்றது.
இந்தத் திட்டம் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் இடத்திலேயே அவர்களின் மாதாந்திர உணவுப் பொருட்களைப் பெற வழிவகை செய்கின்றது.
இருப்பினும், இந்தத் திட்டத்தில் மண்ணெண்ணெய் சேர்க்கப் படவில்லை. இதை ரேஷன் அட்டை பதிவு செய்யப்பட்ட பொது விநியோகக் கடைகளில் மட்டுமே வாங்க முடியும்.