தமிழ் ஆவணங்கள் மற்றும் முத்திரைகள் – மைசூரிலிருந்து சென்னைக்கு இடமாற்றம்
January 9 , 2022 1451 days 660 0
சென்னையின் உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வானது மைசூர் கல்வெட்டுக் கிளையில் பாதுகாக்கப்படும் அனைத்துத் தமிழ் ஆவணங்கள் மற்றும் முத்திரைகள் ஆகியவற்றை 6 மாதங்களுக்குள் சென்னையிலுள்ள அதன் கிளை அலுவலகத்திற்கு இடமாற்ற வேண்டும் என்று கலாச்சாரத் துறை அமைச்சகத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
N. கிருபாகரன், மற்றும் M. துரைசாமி ஆகியோர் அடங்கிய ஒரு அமர்வு சென்னையில் உள்ள இந்தியத் தொல்லியல் துறையின் துணைப் பிரிவு சபையின் கல்வெட்டுக் கிளை அலுவலகத்தினை ‘கல்வெட்டுக் கிளை அலுவலகம் – தமிழ்’ என்று பெயரிடுமாறும் மத்திய அரசு மட்டும் இந்தியத் தொல்லியல் துறை ஆகியவற்றிற்கு உத்தரவிட்டுள்ளது.