திருப்பூர் மாவட்டம் குமாரிக்கல் பாளையத்தில் இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை (ASI) மேற்கொண்ட ஆய்வில், தமிழ்-பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இந்த எழுத்துக்கள் காலத்தால் கி.மு. 1-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதல் கி.பி. 1-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரையிலானவை என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பானை ஓடு பண்டைய காலத்தில் பயன்படுத்தப்பட்ட ஒரு கருப்பு-சிவப்பு நிறச் சேமிப்பு ஜாடியின் துண்டாகும்.
இந்த எழுத்துக்களில் “இரும்பொறை” என்று வாசிக்கப்பட்டுள்ளதால் இது சங்க கால சேர மன்னர்களுடன் தொடர்புடையது.
இந்த அகழ்வாராய்ச்சி தளத்தில் இரும்புக்காலம் மற்றும் ஆரம்பகால வரலாற்று மனித குடியிருப்புகள் மற்றும் ஈமச் சின்னங்கள் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன.
சிவப்பு நிறப் பானை ஓடுகள், கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் மற்றும் ஓவியம் தீட்டப்பட்ட மட்பாண்டங்கள் போன்றவை பிற கண்டுபிடிப்புகளாகும்.
இங்குள்ள 26 அடி உயர நடுகல் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப் படலாம்.