TNPSC Thervupettagam
June 30 , 2019 2362 days 3490 0
  • தமிழ்நாட்டின் மாநிலப் பட்டாம்பூச்சியாக தமிழ் மறவன் (சிரோச் ரோவ் தாய்ஸ்) பட்டாம்பூச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
  • வெளிப்புறத்தில் பழுப்பு நிற வளையத்துடன் முழுவதும் பழுப்பு நிறம் கொண்டதாக காணப்படும் இந்த பட்டாம்பூச்சி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகின்றது. மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் 32 வகை பட்டாம் பூச்சி இனங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • தனது மாநிலத்திற்காக மாநிலப் பட்டாம் பூச்சியை அறிவிக்கும் நாட்டின் 5-வது மாநிலம் தமிழ்நாடு ஆகும்.
  • தனது மாநிலப் பட்டாம்பூச்சியாக நீல மார்மானை அறிவித்த முதலாவது மாநிலம் மகாராஷ்டிரா ஆகும். இதற்கு அடுத்து உத்தராகண்ட் (பொது மயில்), கர்நாடகா (தென் பறவை இறகுகள்), கேரளா (பட்டைகள் கொண்ட மலபார் மயில்) ஆகிய மாநிலங்கள் தங்களுடைய மாநிலப் பட்டாம் பூச்சியை அறிவித்துள்ளன.
  • தமிழ்நாட்டின் இதர சின்னங்கள் பின்வருமாறு
    • அரசு முத்திரை : ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரம்
    • விலங்கு : வரையாடு
    • பறவை : மரகதப் புறா
    • மலர் : செங்காந்தள் மலர்
    • மரம் : பனை மரம்
    • பழம் : பலாப்பழம்
    • விளையாட்டு : கபடி
    • நடனம் : பரதநாட்டியம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்