முன்னாள் கல்வி அமைச்சர் T.S. அவினாசிலிங்கம் செட்டியாரால் சங்கப் பதிவுச் சட்டத்தின் கீழ் 1946 ஆம் ஆண்டில் தமிழ் வளர்ச்சிக் கழகம் நிறுவப்பட்டது.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சேப்பாக்கம் வளாகத்தில் செயல்பட்டு வருகின்ற இந்தக் கழகம் 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதன் 80வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இந்தக் கழகத்தின் அறங்காவலர் குழுவின் தலைவராக உள்ளார்.
இணையத்தில் ஸ்கேன் செய்யப்பட்ட தமிழ் உள்ளடக்கத்தை ஒளியிழை உருவ அடையாள அங்கீகார (OCR) முறையைப் பயன்படுத்தி, அதனைத் தேடக் கூடிய உரையாக மாற்றும் திட்டத்தை இந்தக் கழகம் தொடங்கியுள்ளது.
இந்த டிஜிட்டல் மயமாக்கல் முன்னேடுப்பிற்காக விக்கிபீடியா மற்றும் மத்திய செம்மொழி தமிழ் நிறுவனத்துடன் இந்தக் கழகம் கூட்டு சேர்ந்துள்ளது.
அதன் செயல்பாடுகளை ஆதரிக்க தமிழக முதல்வர் 2.15 கோடி ரூபாய் நிதியை வழங்கினார்.
இது தமிழ் கலைக்களஞ்சியத்தின் 10 தொகுதிகள், குழந்தைகள் இலக்கியத்தின் 10 தொகுதிகள், மருத்துவம் பற்றிய 13 தொகுதிகள் மற்றும் சித்த மருத்துவம் பற்றிய 7 தொகுதிகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்-தமிழ்-ஆங்கில மாணவர் அகராதி மற்றும் உலகளாவிய தமிழ் புத்தகப் பட்டியல் உட்பட ஆறு திட்டங்களையும் கழகம் செயல்படுத்தி வருகிறது.
தமிழ் நாடகக் கலைக்களஞ்சியம், தமிழ் சிந்தனைகளின் கலைக்களஞ்சியம், தமிழ் சொல்லாக்கம் மற்றும் தமிழியல் கட்டுரைக் காப்பகம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வரும் பிற திட்டங்களில் அடங்கும்.
இந்த அகராதித் திட்டம் ஆனது, புலம்பெயர்ந்தத் தமிழர்களின் குழந்தைகளை இலக்காகக் கொண்டது மற்றும் இதனை நிறைவு செய்ய ஓராண்டு ஆகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.