மாநிலத்திலுள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பிற பொது அமைப்புகளில் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன்னதாக 'தமிழ்த் தாய் வாழ்த்து' கட்டாயமாகப் பாடப் பட வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றம் ஒருமனதாக நிறைவேற்றியது.
மாநிலப் பாடல் இசைப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் 2026 ஆம் ஆண்டு ஜூலை 9 அன்று தேதியிட்ட கடிதம் ஒன்றில் சில கருத்துகளைத் தெரிவித்து இருந்ததோடு, மாநில அரசு நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் 'வந்தே மாதரம்' பாடலை இசைக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறுத்தியிருந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
'தமிழ்த் தாய் வாழ்த்து' என்பது 1891-ஆம் ஆண்டில் மனோன்மணியம் சுந்தரனார் எழுதிய 'மனோன்மணியம்' நூலிலிருந்து எடுக்கப்பட்டதாகும்.
அரசு நிகழ்ச்சிகளில் இதனை முதலில் பாட வேண்டும் என்று வலியுறுத்தும் அரசாணை 1970 ஆம் ஆண்டு நவம்பர் 23 அன்று நடைமுறைக்கு வந்ததாக அத்தீர்மானம் குறிப்பிட்டது.
அதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 12, அன்று திமுக அரசு இதனை மாநிலப் பாடலாக அங்கீகரித்து உத்தரவு பிறப்பித்தது.
மாநில அரசின் இத்தீர்மானம் 'தமிழ்த் தாய் வாழ்த்து'க்கு முன்னுரிமை அளிக்கிறது.