TNPSC Thervupettagam

தமிழ்நாடு 2030: 14-அம்ச மேம்பாட்டு செயல்திட்டம்

March 8 , 2026 2 days 55 0
  • தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் 14-அம்ச துறை வாரியான செயல்திட்டமான “தமிழ்நாடு 2030” ஐ வெளியிட்டார்.
  • உங்க கனவ சொல்லுங்க” எனும் வீட்டுக் கணக்கெடுப்பு மூலம் 1.81 கோடி குடும்பங்களின் கருத்துகளின் அடிப்படையில் இந்த திட்டம் அமைந்துள்ளது.
  • முன்னாள் குடியரசுத் தலைவர் A.P.J. அப்துல் கலாம் அவர்களால் ஈர்க்கப்பட்ட "உத்தமர் காந்தி மாதிரி கிராமங்கள் திட்டம்", கிராமங்களைப் பொருளாதார வளர்ச்சியின் மையங்களாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த திட்டம் 10 கிராமப் பஞ்சாயத்துகளுடன் தொடங்கி கிராமப்புறங்களில் நகர்ப்புற வசதிகளை வழங்கும்.
  • கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், கிராமப்புறங்களில் 5 லட்சம் வீடுகளும், நகர்ப்புறங்களில் 2 லட்சம் வீடுகளும் கட்டப்படும்.
  • அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு உறுதி செய்யப்படுவதுடன் புற்று நோய், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை முன்கூட்டியே கண்டறிவதற்கான சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.
  • தாய்மார்கள் இறப்பு விகிதம் (MMR) மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை (IMR) குறைப்பதில் இந்தியாவில் முதலிடத்தை அடைய மாநிலம் இலக்கு வைத்துள்ளது, மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையங்கள் அமைக்கப் படும்.
  • விவசாயத்தில், நிகர விதைப்பு பரப்பளவு 50 லட்சம் ஹெக்டேராக அதிகரிக்கப்படுவதுடன், மண் சுகாதார அட்டைகள் 43 லட்சம் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படும்.
  • இயற்கை விவசாயம் சுமார் 17,000 ஹெக்டேராகவும், இயற்கை விவசாயம் 1 லட்சம் ஹெக்டேராகவும், சொட்டு நீர்ப்பாசன வசதிகள் சுமார் 21 லட்சம் ஹெக்டேராகவும் விரிவடையும்.
  • மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் கட்டப்படும், மேலும் உணவு உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.
  • கல்வியில், இடைநிற்றல் நீக்கப்படுவதுடன் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளிலும் 100% ஸ்மார்ட் வகுப்பறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
  • நூலகம் 5.0 இன் கீழ், 300க்கும் மேற்பட்ட நூலகங்கள் நிறுவப்படும், மேலும் 1,000 மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும்.
  • நான் முதல்வன் 2.0 திட்டம் உலகளாவியப் போட்டித் தன்மைக்காக மாணவர்களுக்கு மேம்பட்ட திறன் பயிற்சி அளிக்கும்.
  • உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) 90% ஆக அதிகரிக்கப்படும் மேலும் ஆராய்ச்சிக்கான ஆய்வகங்கள், சிறப்பு மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) ஆய்வகங்கள் இருக்கும்.
  • விளையாட்டு வீரர்களுக்கான கல்விக் கடன்களுடன் கூடிய நெகிழ்வான பாடத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும், மேலும் நிலமற்ற ஒவ்வொரு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி குடும்பத்திற்கும் படிப்படியாக வீட்டுப் பட்டா வழங்கப்படும்.
  • ₹18 லட்சம் கோடி முதலீட்டை ஈர்ப்பது, 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்குவது, ஏற்றுமதியை $120 பில்லியனாக அதிகரிப்பது, “தமிழ்நாட்டில் தயாரிப்போம்” திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்துறை பூங்காக்களை நிறுவுவது, பாதசாரிகளுக்கு ஏற்ற சாலைகள், 20% பசுமையான இடங்கள், கழிவுநீர் மறுசுழற்சி வசதிகள் மற்றும் நவீன கலாச்சார மையங்களைக் கொண்ட நகரங்களை உருவாக்குவது ஆகியவற்றையும் தமிழ்நாடு ஒரு நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்