TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசின் 4 ஆண்டு சாதனைகள்

May 14 , 2025 4 days 95 0
  • 10,27,547 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு முதலீட்டுத் திட்டங்களுக்கான மொத்தம் 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதுடன் சுமார் 32.23 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கியுள்ளன.
  • 2020-21 ஆம் ஆண்டில் 26.16 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் ஏற்றுமதியானது, 2024-25 ஆம் ஆண்டில் 52.07 அமெரிக்க டாலராக அதிகரித்துள்ளது.
  • தமிழ்நாடு மாநிலமானது 14.65 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான மின்னணுப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களை விஞ்சி இந்திய அளவில் முதலிடத்தில் உள்ளது.
  • 2020-21 ஆம் ஆண்டில் 2.9 கோடியாக இருந்த தொழிலாளர்களின் எண்ணிக்கையானது, 2024-25 ஆம் ஆண்டில் 3.87 கோடியாக அதிகரித்தது.
  • 26% என்ற தேசிய சராசரியுடன் ஒப்பிடும் போது, தமிழ்நாட்டின் உயர்கல்வி சேர்க்கை விகிதமானது, 2023-2024 ஆம் ஆண்டில் 51.3% ஆக இருந்தது.
  • பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் தேசிய அளவில் ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 66.4 ஆக இருந்த நிலையில், தமிழ்நாட்டில் அது 24 ஆக இருந்தது.
  • உலகளாவியத் திறன் மையங்களைப் பொறுத்தவரை, 24.5% வளர்ச்சி விகிதத்துடனும் சென்னையில் 94,121 திறன் மையங்கள் உள்ளன.
  • இதில், தமிழ்நாடு மாநிலமானது மும்பை, புனே, ஐதராபாத், பெங்களூரு மற்றும் நாட்டின் பிற நகரங்களை விஞ்சியுள்ளது.
  • மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் மற்றும் கலைஞர் கனவு இல்லம் போன்றவை அரசாங்கத்தினால் செயல்படுத்தப்படும் பிற திட்டங்கள் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்