TNPSC Thervupettagam

தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்

January 6 , 2026 2 days 90 0
  • தமிழ்நாடு அரசானது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) பெருமளவில் பின்பற்றுகின்ற தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை (TAPS) அறிமுகப்படுத்தியுள்ளது.
  • TAPS திட்டத்தின் கீழான ஓய்வூதியம் ஆனது கடைசி மாதப் பணி காலத்தில் பெறப்பட்ட ஊதியத்தில் 50% ஆக நிர்ணயிக்கப்படும்.
  • இந்தத் திட்டத்தில் 25 லட்சம் ரூபாய் என்ற அதிகபட்ச வரம்புடன், உயிரிழப்பு மற்றும் ஓய்வூதியப் பணிக்கொடை (DCRG) அடங்கும்.
  • TAPS திட்டத்தின் கீழான குடும்ப ஓய்வூதியம் ஆனது ஓய்வூதியத் தொகையில் 60% ஆக இருக்கும்.
  • பங்களிப்பு சார் ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் பதிவு செய்துள்ள ஊழியர்கள் TAPS திட்டத்திற்கு மாற்றப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஓய்வூதிய விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகு இந்தத் திட்டம் நடைமுறைக்கு வரும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்