தமிழ்நாடு அரசின் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் (TAPS) பகுப்பாய்வு
January 7 , 2026 2 days 110 0
இது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் (OPS) பிரதி ஆகும்.
இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் (UPS) மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.
ஒவ்வோர் ஊதியக் குழுவும் அமைக்கப்படும் போது மாதாந்திர தனிநபர் பங்களிப்பு மற்றும் ஓய்வூதியத் திருத்தத்தைத் தவிர, முன்மொழியப்பட்ட ஓய்வூதியத் திட்டம் OPS திட்டத்தின் பரந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுகிறது.
OPS திட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று இறப்பு மற்றும் ஓய்வூதியப் பணிக் கொடை (DCRG) ஆகும்.
உதாரணமாக, 20 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக பணியில் இருந்தவர் இறந்தால், 25 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
இந்த அம்சம் TAPS திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
OPS திட்டத்தினைப் போலவே, குடும்ப ஓய்வூதியம் ஆனது ஓய்வூதியத்தில் சுமார் 60 சதவீதத்திற்குச் சமமாக இருக்கும்.
TAPS திட்டத்தின் கீழான ஓய்வூதியம் கடைசி மாதப் பணிக் காலத்தில் பெறப்பட்ட சம்பளத்தில் 50 சதவீதத்தினை அடிப்படையாகக் கொண்டது அதே நேரத்தில் UPS திட்டத்தின் கீழான ஓய்வூதியம் கடைசி 12 மாத அடிப்படை ஊதியத்தின் சராசரியில் 50% ஆக வழங்கப்படும்.
UPS திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர் இறந்தால், சட்டப்பூர்வமாக திருமணமான வாழ்க்கைத் துணை மட்டுமே குடும்ப ஓய்வூதியப் பணத்தைப் பெற தகுதியுடையவர், அதே சமயம் குடும்பம், அதாவது ஓய்வூதியதாரரால் பரிந்துரைக்கப்பட்ட சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு TAPS திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும்.
UPS திட்டத்தில் இருக்கும் போது, 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தகுதி வாய்ந்தப் பணிக்குப் பிறகு ஓய்வு பெற்றால் குறைந்தபட்ச உறுதி செய்யப்பட்ட பணம் செலுத்தப்படும்.
TAPS திட்டத்தின் கீழ், பணிக் காலத்தின் நீளத்தைப் பொருட்படுத்தாமல் இது வழங்கப் படும்.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் (CPS) கீழ் தற்போதுள்ள அனைத்து ஊழியர்களும், அதாவது தோராயமாக 6.24 லட்சம் பேர், தங்கள் ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும், TAPS திட்டத்திற்கு மாறுவார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு (LIC) பதிலாக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் (PFRDA) ஓய்வூதிய நிதியை முதலீடு செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இதுவரையில், 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் 01 அல்லது அதற்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய CPS திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட முழுத் தொகையும் LIC கழகத்தின் ஓய்வுறுதி நிதியில் முதலீடு செய்யப்படுகிறது.
அத்தகைய நடவடிக்கையானது அதிக வருமானத்தை ஈட்டியிருக்கும் என்பதால், PFRDA நிதியை முதலீடு செய்ய பயன்படுத்தாததற்கு தலைமைக் கணக்கு தணிக்கையாளர் (CAG) மாநில அரசைக் குற்றம் சாட்டினார்.
2025 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2023-24 ஆம் ஆண்டிற்கான மாநில நிதி குறித்த CAG அறிக்கையானது “முன்னர், LIC மற்றும் கருவூலப் பத்திரங்கள் ஆகிய இரண்டிலும் DCPS [வரையறுக்கப்பட்டப் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அல்லது CPS] திரட்டல்களை மாநில அரசு முதலீடு செய்தது, இது பொது வருங்கால வைப்பு நிதி விகிதத்தை விட குறைந்த வட்டியை அளித்தது” என்று கூறியது.
இந்தப் பிரச்சினையானது முந்தைய SFAR [மாநில நிதித் தணிக்கை அறிக்கைகள்] அறிக்கைகளில் முன்னிலைப்படுத்தப்பட்டது.
தற்போது DCPS திரட்டல்களை, தற்போது 7.1% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ள பொது வருங்கால வைப்பு நிதி விகிதத்துடன் இணைக்கப்பட்ட வட்டி விகிதங்களுடன், LIC கழகத்தில் மட்டுமே அரசு முதலீடு செய்து வருகிறது.
குறைந்தபட்சம் அடுத்த 15 ஆண்டுகளுக்கு மாநிலச் சொந்த வரி வருவாயின் (SOTR) வளர்ச்சி விகிதம் குறித்து கணிப்புகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வோர் ஆண்டும் ஒதுக்கீட்டின் மதிப்பு அதிகரித்த போதிலும், ஓய்வூதியப் பொறுப்பின் விகிதம் SOTR வருவாயில் சுமார் 21% முதல் 22% வரை நிலை பெறும்.
2023-24 ஆம் ஆண்டிற்கான CAG அறிக்கையின்படி ஓய்வூதியங்கள் சுமார் 37,696.81 கோடி ரூபாயாகவும், SOTR 1,67,279 கோடி ரூபாயாகவும் இருந்ததனால் ஓய்வூதியங்கள் மற்றும் பிற ஓய்வூதியப் பலன்களின் பங்கு 22.5% ஆகும்.