February 17 , 2026
19 hrs 0 min
32
- 2025–26 ஆம் ஆண்டிற்கான கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் மேலும் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட தமிழக அரசு ₹3,500 கோடி நிர்வாக ஒப்புதலை வழங்கியது.
- மாநிலம் முழுவதும் தகுதியான பயனாளிகளுக்கு நிரந்தர வீடுகளை வழங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.
- வேலை தேடுபவர்கள் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக உதவும் வகையில் ‘தேர்வுக் காலம்’ எனும் கைபேசி செயலியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
- இளைஞர்களின் திறன் மேம்பாட்டை ஆதரிப்பதற்காக திறன் 360 எனும் தளத்தையும் அவர் தொடங்கி வைத்தார்.
- சென்னை ஷெனாய் நகரில், அகில இந்திய குடிமைப் பணிகளுக்கான பயிற்சி மையமாக செயல்படவுள்ள ₹62.50 கோடி மதிப்பிலான கட்டிடத்திற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

Post Views:
32