TNPSC Thervupettagam

தமிழ்நாடு அலுவல் ஆய்வுக் குழு

June 20 , 2026 2 days 63 0
  • 17வது தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைக்காக புதிய அலுவல் ஆய்வுக் குழு (BAC) புனரமைக்கப்பட்டுள்ளது.
  • அலுவல் ஆய்வுக் குழு (BAC) என்பது அவையின் தினசரி நிகழ்ச்சி நிரல் மற்றும் சட்டமன்ற அலுவலர்களைத் திட்டமிட்டு ஒழுங்குபடுத்தும் ஒரு சட்டப்பூர்வ குழுவாகும்.
  • இது அரசு மசோதாக்கள், விவாதங்கள், வரவு செலவுத் திட்ட நடவடிக்கைகள் மற்றும் இதர அலுவல் ரீதியான விவாதங்களுக்கான நேரத்தை ஒதுக்குகிறது.
  • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் சபாநாயகர் இக்குழுவின் அலுவல் வழித் தலைவராகப் பணியாற்றுகிறார்.
  • இக்குழு பொதுவாக சபாநாயகரால் நியமிக்கப்படும் 10 முதல் 17 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் மற்றும் அவையிலுள்ள அரசியல் கட்சிகளின் விகிதாசார பலத்தைப் பிரதிபலிக்கும்.
  • இதன் உறுப்பினர்களில் பொதுவாக முதலமைச்சர் (அவைத் தலைவர்), எதிர்க்கட்சித் தலைவர், கட்சி கொறடாக்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மூத்த உறுப்பினர்கள் இடம் பெறுவர்.
  • ஆளுநர் உரைக்கான அட்டவணை மற்றும் வரவு செலவுத் திட்ட விவாதங்களுக்கு ஒதுக்கப் படும் நேரம் உட்பட சட்டமன்றக் கூட்டத்தொடரின் கால அட்டவணையை BAC தீர்மானிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்