- தமிழகத்தின் 2026–27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால வேளாண் பட்ஜெட்டை வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார்.
- விவசாயிகள் நலன் மற்றும் விவசாய மேம்பாட்டை மையமாகக் கொண்டு, 2021–22 முதல் தமிழ்நாடு தனி விவசாய பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறது.
நிதி ஒதுக்கீடு
- வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறைக்கான மொத்த ஒதுக்கீடு ₹47,248.24 கோடி ஆகும்.
- வேளாண் பட்ஜெட் ஒதுக்கீடு 2021–22ல் ₹34,220 கோடியிலிருந்து 2026–27ல் ₹47,248 கோடியாக அதிகரித்துள்ளது.
- விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கான மொத்த பட்ஜெட் ₹45,661.44 கோடி (மூலதனம்: ₹8,352.19 கோடி; வருவாய்: ₹37,309.25 கோடி) ஆகும்.
வளர்ச்சி மற்றும் செயல்திறன்
- 2012-13 முதல் 2020-21 வரை 1.36% ஆக இருந்த விவசாயத்தின் சராசரி மொத்த மாநில மதிப்பு கூட்டல் 2021-22 முதல் 2024-25 வரை 3.03% ஆக உயர்ந்துள்ளது.
- நிலையான (2011-12) விலையில் GSVA 2024-25 ஆம் ஆண்டில் ₹53,75,639 லட்சத்திலிருந்து சுமார் 9.97% அதிகரித்து ₹59,11,708 லட்சமாக இருந்தது.
- மொத்த பயிர் பரப்பளவு 146.77 லட்சம் ஏக்கரிலிருந்து (2019–20) 151 லட்சம் ஏக்கராக (2023–24) அதிகரித்தது.
- இரட்டைப் பயிர் சாகுபடி பரப்பளவு 29.74 லட்சம் ஏக்கரிலிருந்து (2019–20) 33.60 லட்சம் ஏக்கராக (2023–24) அதிகரித்தது.
- 2021–24 ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 346.38 லட்சம் மெட்ரிக் டன்களை எட்டியது.
- இந்தியாவில் ராகி உற்பத்தித் திறனில் தமிழ்நாடு முதலிடத்திலும் சோளம், எண்ணெய் வித்துக்கள் மற்றும் கரும்பு உற்பத்தித் திறனில் 2வது இடத்திலும், நிலக்கடலை மற்றும் சிறு தானிய உற்பத்தித் திறனில் 3வது இடத்திலும் உள்ளது.
- தமிழ்நாடு தேசிய அளவில் மரவள்ளிக்கிழங்கு மற்றும் மல்லிகை சாகுபடி பரப்பளவில் முதலிடத்திலும், நெல்லிக்காய், முட்டைக்கோஸ் மற்றும் முள்ளங்கி உற்பத்தியில் முதலிடத்திலும், மரவள்ளிக்கிழங்கு, மல்லிகை, பலாப்பழம் மற்றும் கொய்யா உற்பத்தியில் இரண்டாவது இடத்திலும் உள்ளது.
- 2024-25 ஆம் ஆண்டில், இரட்டைப் பயிர் சாகுபடி பரப்பளவு 13.99 லட்சம் ஹெக்டேராக அதிகரித்தது என்பதோடு இது 2019-20 உடன் ஒப்பிடும் போது சுமார் 2 லட்சம் ஹெக்டேர் அதிகமாகும்.
விவசாயிகளுக்கான ஆதரவு நடவடிக்கைகள்
- 2021–22 முதல், பாசனத்திற்காக விவசாயிகளுக்கு சுமார் 1.81 லட்சம் இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
- சுமார் 55,000 விவசாயிகள் மானிய விலையில் விவசாய இயந்திரங்களைப் பெற்றனர் என்பதோடு மேலும் 1,109 தனிப்பயன் வாடகை மையங்கள் நிறுவப்பட்டன.
நீர்வளம் மற்றும் வேளாண் காடுகள் வளர்ப்பு
- கடந்த ஐந்து ஆண்டுகளில், 68,930 பாரம்பரிய நீர்நிலைகள் புதுப்பிக்கப்பட்டன; 1 லட்சம் பாசன கால்வாய்கள் தூர்வாரப்பட்டன; 29,800 தடுப்பணைகள் கட்டப்பட்டன; மேலும் 31,325 நிலத்தடி நீர் மறுசீரமைப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
- மொத்தம் 3.24 கோடி மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பதோடு மேலும் 2.24 லட்சம் ஏக்கர் வேளாண் காடுகளின் கீழ் கொண்டுவரப்பட்டன.
- புதிய திட்டங்கள் மற்றும் பணிகள்
- விவசாய உள்ளீடுகள், நிபுணர் வழிகாட்டுதல் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதற்காக 1,000 விவசாயிகள் சேவை மையங்களை அரசாங்கம் அறிவித்து உள்ளது.
- மலை விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம் 63,000 மலை விவசாயிகளுக்கு ஆதரவினை அளிக்கும்.
- 17,116 கிராமங்களில் ஒரு கிராம மக்கள் தொடர்பு பிரச்சாரம் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும்.
- விவசாயிகள் குழுக்கள் மற்றும் பயிர் உற்பத்தி தொகுப்புகள் மூலம் தினை சாகுபடியை சிறுதானிய திட்டம் ஊக்குவிக்கும்.
- இயற்கை வேளாண்மை முயற்சிகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த விவசாயம், இயற்கை சான்றிதழ் மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவை ஊக்குவிக்கும்.
- குறைந்த நீர் தேவைப்படும் தினை, பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்ற மாற்றுப் பயிர்களை பயிரிட விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
- தரமான விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்காக ₹250 கோடி ஒதுக்கப்பட்டது.
சிறப்பு முன்னெடுப்புகள்
- ஊட்டச்சத்து பாதுகாப்புக்காக ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் சிறு தானியங்களை ஊக்குவிக்கும்.
- ஒருங்கிணைந்த தென்னை மேம்பாட்டுத் திட்டம் தென்னை சாகுபடி, பூச்சி கட்டுப்பாடு மற்றும் மதிப்பு கூட்டலை ஆதரிக்கும்.
- சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர்ப்பாசன முறைகளுக்கு நுண் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு ₹1,168 கோடி ஒதுக்கப்பட்டது.
- மேட்டூர் அணையை சரியான நேரத்தில் திறந்ததன் மூலம் தமிழ்நாட்டில் கூடுதலாக 3.48 லட்சம் ஹெக்டேர் பாசனம் செய்ய உதவியது.
- விவசாய விளைபொருட்களுக்கான 100 மதிப்பு கூட்டல் அலகுகளை நிறுவ ₹50 கோடி ஒதுக்கப்பட்டது.
- இயற்கைப் பேரிடர்களுக்கு எதிராக 35 லட்சம் ஏக்கர் நிலங்களைக் காப்பீடு செய்ய பயிர் காப்பீட்டுத் திட்டம் ₹841 கோடியைப் பெற்றது.
- தமிழ்நாட்டில் மரம் மற்றும் வனப்பகுதியை 33% ஆக அதிகரிப்பதே அரசின் உறுதிப்பாடாகும்.
- காடுகளுக்கு வெளியே பசுமைப் பரப்பை விரிவுபடுத்துவதற்காக பசுமை தமிழ்நாடு திட்டத்தின் கீழ் வேளாண் காடுகள் பரவலாக ஊக்குவிக்கப்படுகின்றன.
- கடந்த ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 3.24 கோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்டன என்பதோடு மேலும் 2.24 லட்சம் ஏக்கர் வேளாண் காடுகளின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
- ஈட்டி மரங்களை வளர்ப்பதை ஊக்குவிப்பதற்காக வேண்டி, தமிழ்நாடு ஈட்டி மரங்கள் (பாதுகாப்பு) சட்டம், 1994, பிப்ரவரி 13, 2025 க்கு பிறகு நீட்டிக்கப்படவில்லை.
பிற ஒதுக்கீடுகள்
- ஆறு மாவட்டங்களில் நீர்நிலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ₹68 கோடி ஒதுக்கப் பட்டது.
- காலநிலைக்கு ஏற்ற விவசாய முயற்சிகளில் காலநிலைக்கு உகந்த மீத்திறன் கிராமங்கள் மற்றும் மாதிரி செயல்விளக்கப் பண்ணைகள் அடங்கும்.
- விவசாய இயந்திரங்கள் மற்றும் ட்ரோன்களை இயக்குவதில் கிராமப்புற இளைஞர்களுக்கு பயிற்சித் திட்டங்கள் உதவும்.
- கால்நடைப் பராமரிப்பு, பால்வள மேம்பாடு, மீன்வளம், கிராமப்புற மேம்பாடு மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் (SHGs) ஆகியவற்றிற்கும் ஆதரவு வழங்கப்படுகிறது.
- விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக ₹8,186 கோடி ஒதுக்கப்பட்டது.
