TNPSC Thervupettagam

தமிழ்நாடு உப்பு குறைப்பு திட்டம்

September 10 , 2026 3 days 72 0
  • பொதுமக்கள் உப்பு உட்கொள்வதைக் குறைப்பதற்காக தமிழ்நாடு அரசு மாநில அளவிலான திட்டத்தை அறிவித்துள்ளது.
  • உலக சுகாதார அமைப்பு (WHO) தினமும் 5 கிராமுக்கு குறைவாக உப்பு உட்கொள்ளப் பரிந்துரைக்கிறது, அதே வேளையில் தமிழ்நாட்டின் சராசரி நுகர்வு 7-8 கிராம்களாக உள்ளது.
  • தென்னிந்திய உணவில் உட்கொள்ளப்படும் உப்பில் சுமார் 88% வீட்டில் சமைக்கும் போது சேர்க்கப்படும் உப்பில் இருந்தே கிடைக்கிறது.
  • மாநிலம் தழுவிய சிறுநீர் மாதிரி கணக்கெடுப்பு மூலம் உப்பு நுகர்வு அளவிடப்படும், அதே வேளையில் அரசு சமையலறைகளில் உப்பின் பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைப்பதற்கான தரநிலைகள் பின்பற்றப்படும்.
  • குறைந்த சோடியம் கொண்ட உப்பு மாற்றீடுகளை அரசு ஆய்வு செய்யும் மற்றும் மக்களைத் தேடி மருத்துவம் மற்றும் சுகாதார நல மையங்கள் மூலம் உப்பு குறைப்பு ஆலோசனைகளை வழங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்