TNPSC Thervupettagam

தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாடு 2026

February 5 , 2026 12 days 92 0
  • சென்னையில் நடைபெற்ற 2026 தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா உச்சி மாநாட்டில், 2027 ஜனவரியில் தமிழ்குறித்த பெரிய அளவிலான சர்வதேச சமகால கலைக் கண்காட்சி நடைபெறும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
  • மாநில அரசு ₹22,794 கோடி மதிப்புள்ள 127 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டது என்ற நிலையில் இதன் மூலம் சுமார் 65,937 வேலைவாய்ப்புகள் உருவாக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • மாமல்லபுரத்தில் உலகத் தரம் வாய்ந்த சுற்றுலா உள்கட்டமைப்பை உருவாக்க, ₹100 கோடி மதிப்பீட்டில் ஒரு சிறப்புப் பகுதி மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்படும்.
  • சிறப்பு உவகைக் கோட்டங்கள், தங்குமிட வசதிகள், முகாமிடும் தளங்கள் மற்றும் இயற்கை சார்ந்த ஓய்வு விடுதிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் 31 இடங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
  • தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023-இன் கீழ், தமிழ்நாடு மாநிலத் தொழில் மேம்பாட்டுக் கழகமானது (சிப்காட்) கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு மற்றும் தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சுற்றுலாத் தலங்களைக் கண்டறிந்து, அங்கு வசதிகளை மேம்படுத்தும்.
  • கடந்த ஐந்து ஆண்டுகளில், தமிழ்நாடு சுற்றுலாத்துறையில் 612.18 கோடி முதலீடு செய்து, 128.97 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளையும் 45 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்