தமிழ்நாடு ஊரக உள்ளாட்சி அமைப்புகள் — சிறப்பு அதிகாரிகள்
October 24 , 2026 15 hrs 0 min 19 0
28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் சிறப்பு அதிகாரிகளின் பதவிக்காலத்தை தமிழ்நாடு அரசு நீட்டித்துள்ளதுடன், மேலும் 9 மாவட்டங்களில் 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வரை சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளது.
28 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி அன்று முடிவடைந்து அதன் பிறகு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.
மீதமுள்ள 9 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 19 ஆம் தேதி அன்று முடிவடைந்தது.
46 ஊரக உள்ளாட்சி அமைப்புகள் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைக்கப் படுவதால், உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் மாறும் என்பதனால் தேர்தல்களை நடத்த முடியவில்லை.
ஊரக உள்ளாட்சித் தேர்தல்களை நடத்துவதற்கு முன்பாக 23 மாவட்டங்களில் எல்லை மறுநிர்ணயம் மற்றும் இடஒதுக்கீடு ஆகிய பணிகள் முடிக்கப்பட வேண்டும்.
9 புதிய ஊராட்சி ஒன்றியங்கள், 93 புதிய கிராமப்புற ஊராட்சிகள் மற்றும் 1 கிராமப்புற ஊராட்சி இணைப்பு ஆகியவற்றை அரசு அறிவித்துள்ளது.
கிராமப்புற ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் மற்றும் மாவட்ட ஊராட்சிகள் ஆகியவற்றை 2027 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி வரை சிறப்பு அதிகாரிகள் நிர்வகிப்பார்கள்.