TNPSC Thervupettagam

தமிழ்நாடு எழுச்சி உச்சி மாநாடு - ஓசூர்

September 13 , 2025 28 days 73 0
  • இரண்டாவது தமிழ்நாடு எழுச்சி உச்சி மாநாடு ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஓசூரில் நடைபெற்று வருகிறது.
  • இந்த உச்சி மாநாட்டில் 90க்கும் மேற்பட்ட முதலீட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப் பட்டன.
  • ஓசூர் ஆனது சென்னை-பெங்களூரு தொழில்துறை வழித்தடத்தின் ஒரு பகுதியாகும் என்பதோடு மேலும் ஆட்டோ (வாகனங்கள்), மின்சார வாகனம், மின்னணுவியல் மற்றும் துல்லியப் பொறியியலில் வலுவான சூழல் அமைப்பைக் கொண்டுள்ளது.
  • ஒப்புதல் நடவடிக்கையின் கீழ் உள்ள முன்மொழியப்பட்ட ஓசூர் சர்வதேச விமான நிலையமானது, ஆண்டுதோறும் 30 மில்லியன் பயணிகளைக் கையாளும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
  • சென்னையில் உள்ள பழைய மகாபலிபுரம் சாலையை (OMR) மாதிரியாகக் கொண்டு ஒரு ஓசூர் கல்வி சார் நிறுவனங்கள் வழித்தடம் திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த வழித்தடமானது, உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையங்களை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2025–26 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதி நிலை ஒதுக்கீடு அறிக்கையில் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புடன் கூடிய ஓசூர் கல்வி நிறுவனங்கள் வழித்தடம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
  • கிருஷ்ணகிரியின் சூளகிரி தாலுக்காவில் உள்ள சென்னப்பள்ளி கிராமத்தில் 27.36 ஏக்கர் நிலத்தை ஓசூர் வர்த்தக மையத் திட்டத்திற்காக TIDCO அடையாளம் கண்டு உள்ளது.
  • டாடா எலக்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் (TEPL) நிறுவனம் 450 கோடி ரூபாய் செலவில் ஒரு மலிவு விலையிலான தொழில்துறை வீட்டு வசதித் திட்டத்தை உருவாக்கி வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்