TNPSC Thervupettagam

தமிழ்நாடு-ஐ.நா. பெண்கள் கூட்டுறவு

January 8 , 2026 14 hrs 0 min 62 0
  • தமிழ்நாடு அரசானது, ஐ.நா. பெண்கள் அமைப்புடன் சென்னையில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாட்டில் பெண்கள் நலன், பாலின சமத்துவம் மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நிலையான மேம்பாட்டு இலக்குகளுடன் (SDGs) இணைந்த பாலினம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடிய நிர்வாகம், திட்டமிடல் மற்றும் நிதி ஒதுக்கீட்டில் கவனம் செலுத்துகிறது.
  • ஐ.நா. பெண்கள் அமைப்பானது, இதனைச் செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசுக்கு தொழில்நுட்ப ஆதரவை வழங்கும்.
  • சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைகள் துறை, உள்துறை, மதுவிலக்கு மற்றும் கலால் துறை, மற்றும் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஆகியவை இதில் ஈடுபடும்.
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD), பொதுத்துறைப் புத்தாக்க ஆய்வகம் (OPSI), மற்றும் UNICEF புத்தாக்க அலுவலகம் (UNICEF–OoI) ஆகியவற்றுடன் முத்தரப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்