October 21 , 2025
20 days
98
- இந்தியாவின் தலைமை கணக்காளர் (CAG) அலுவலகம் ஆனது 2023-24 ஆம் ஆண்டில் தமிழ்நாடு அரசை மதிப்பிட்டுள்ளது.
- தமிழக அரசில், நிதி சார் குறிகாட்டிகளின் பிரிவில் நிர்ணயிக்கப்பட்ட மூன்று இலக்குகளில் ஒன்றில் மட்டுமே முன்னேற்றம் பதிவாகியது.
- மாநிலத்தில் பதிவான முன்னேற்றம் ஆனது நிலுவையில் உள்ள கடன்-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதத்தில் பதிவானது.
- 29.1% என்ற இலக்குக்குப் பதிலாக, இந்த விகிதமானது அந்த ஆண்டில் 28% ஆகக் குறைக்கப்பட்டது.
- வருவாய், நிதி மற்றும் முதன்மை பற்றாக்குறைகள் ஆகிய மூன்று நிதி அளவுருக்களில் ஒவ்வொன்றிற்கும் பின்வரும் இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டன.
- 2025-26 ஆம் ஆண்டிற்குள் வருவாய்ப் பற்றாக்குறையை நீக்குதல்,
- 2025 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் நிதிப் பற்றாக்குறை (FD)-மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதத்தை 3% ஆக அடைதல், மற்றும்
- கடன்-GSDP விகிதத்தை 29.1% ஆகக் குறைத்தல்.
- 2019-20 முதல் 2023-24 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில் இருந்த போக்குகள் குறித்து CAG அறிக்கை வெளியிட்டது.
- 2019-20 ஆம் ஆண்டில் 24.35% ஆக இருந்த கடன்-GSDP விகிதம் ஆனது 2021-22 ஆம் ஆண்டில் 28.83% ஆக அதிகரித்தது.
- இது 2022-23 ஆம் ஆண்டில் 28.39% ஆக ஓரளவு குறைக்கப்பட்டு, 2023-24 ஆம் ஆண்டில் 28% ஆக இருந்தது.
- இந்தக் கடனில் நிதிநிலை அறிக்கைக் கணக்கின் வரவு சாராக் கடன் வாங்குதலும் (OBB) அடங்கும்.
- சரிவுகள் இருந்தபோதிலும், 2023-24 ஆம் ஆண்டில் FD-GSDP விகிதம் 3.32% ஆக இருந்தது.
- இது தமிழ்நாடு மாநில நிதியியல் பொறுப்பு மற்றும் நிதிநிலை மேலாண்மை சட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப் பட்ட இலக்கை விட "மிக அதிகமாக" இருந்தது.
- GSDP சதவீதமாகக் குறிப்பிடப் படும் வருவாய்ப் பற்றாக்குறையானது, 2023-24 ஆம் ஆண்டில் முந்தைய ஆண்டை விட 0.15% அதிகரித்துள்ளது.
- வருவாய்ப் பற்றாக்குறையானது 36,215 கோடி ரூபாயிலிருந்து (2022-23) 45,121 கோடி ரூபாயாக (2023-24) உயர்ந்தது.
- 2025-26 ஆம் ஆண்டிற்குள் அதை நீக்குவதை இலக்காக இருந்த நிலையில், இது நடுத்தர கால நிதித் திட்டக் கணிப்புகளை விட சுமார் 71.5% அதிகமாகும்.

Post Views:
98