தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் சட்டம், 2025 – முதல் வழக்கு
February 22 , 2026 24 days 84 0
தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளைத் தடுக்கும்) சட்டம், 2025 இன் கீழ் முதல் வழக்கு விழுப்புரம் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டது.
கட்டாய கடன் வசூல் நடைமுறைகளைத் தடுக்க இந்த சட்டம் ஜூன் 9, 2025 அன்று அமலுக்கு வந்தது.
சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாகனத்தை பறிமுதல் செய்ய முயன்றதாக ஒரு கடன் வசூல் செய்யும் முகவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு, பாரதிய நியாய சன்ஹிதாவின் தொடர்பு உடைய பிரிவுகள் மற்றும் சட்டத்தின் பிரிவு 20 மற்றும் 21(ii) இன் கீழ் குற்றம் சாட்டப் பட்டார்.