TNPSC Thervupettagam

தமிழ்நாடு கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகம்

November 12 , 2026 2 days 69 0
  • தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு கட்டமைப்பு மற்றும் கட்டுமானக் கழகத்தை (TNICC) முழு அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனமாக (PSU) நிறுவியுள்ளது.
  • இந்தக் கழகம் ₹200 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மாநில அரசின் கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்தும்.
  • இது பயன்படுத்தப்படாத அரசு நிலங்களை மேம்படுத்தி வருவாயை உருவாக்குவதுடன், புதிய நகரியங்கள், தொழில்பேட்டைகள், தொழில்நுட்பப் பூங்காக்கள், தகவல் தொழில்நுட்ப நகரங்கள் மற்றும் வணிகப் பூங்காக்களை அமைக்கும்.
  • கட்டடக்கலை வடிவமைப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுச் சேவைகளையும் இது வழங்கும்.
  • NBCC (இந்தியா) லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பெருமளவில் மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இது, வணிக ரீதியான திட்ட மேலாண்மை ஆலோசகர் (PMC) மாதிரியின் கீழ் இயங்கும்.
  • திட்டங்கள் அனைத்தும் மாநில மின்னணு கொள்முதல் இணையதளத்தின் (e-procurement portal) மூலம் வெளிப்படையான போட்டி ஏலத்தின் அடிப்படையில் ஒதுக்கப்படும்.
  • இக்கழகம் ₹15 லட்சம் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தையும், ₹10 லட்சம் ஆரம்பச் செலுத்தப்பட்ட மூலதனத்தையும் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்