தமிழ்நாடு பசுமை மற்றும் வெள்ளை வகை (மாசுபாடு குறியீடு குறைவாக உள்ளவை) தொழில் துறைகளுக்கான விதிமுறைகளை எளிதாக்குவதற்காக தமிழ்நாடு அரசானது 2019 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த மேம்பாடு மற்றும் கட்டிட விதிகளை திருத்தியமைத்தது.
நகர்ப்புற கிராமப் பஞ்சாயத்து மற்றும் கிராமப் பஞ்சாயத்து பகுதிகளில் தேவைப் படும் குறைந்தபட்ச சாலை அகலம் 7 மீட்டரிலிருந்து 6 மீட்டராகக் குறைக்கப் பட்டு உள்ளது.
இந்தத் தளர்வு ஆனது இந்த கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள பசுமை மற்றும் வெள்ளை வகை தொழில் துறைகளுக்கு மட்டுமே பொருந்தும்.
நகராட்சி, மாநகராட்சி மற்றும் பேரூராட்சிப் பகுதிகளில், அனைத்துத் தொழில்துறை வகைகளுக்கும் குறைந்தபட்ச சாலை அகலம் 7 மீட்டராகவே உள்ளது.
ஆரஞ்சு மற்றும் சிவப்பு வகை தொழில் துறைகளுக்கு இன்னும் அனைத்து பகுதிகளிலும் குறைந்தபட்சம் 7 மீட்டர் சாலை அகலம் தேவைப்படுகிறது.
வெள்ளை, பசுமை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு என அனைத்து தொழில்துறை வகைகளுக்கும் தரை பரப்புக் குறியீடு (FSI) இரண்டாகவே உள்ளது.
தமிழ்நாடு அரசானது முன்னதாக ஒழுங்குமுறை விதிகளை எளிமைப்படுத்தலின் ஒரு பகுதியாக 609 தொழில் துறைகளை வெள்ளைப் பிரிவின் கீழ் வகைப்படுத்தியிருந்தது.