கந்துவட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார்களை அளிப்பதற்காக தமிழ்நாடு அரசு இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த வலைத்தளமானது தமிழ்நாடு பணத்தைக் கடனாக வழங்கும் நிறுவனங்கள் (கட்டாய நடவடிக்கைகளைத் தடுத்தல்) சட்டம், 2025 இன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
பணத்தைக் கடனாக வழங்குவதை முறைப்படுத்துவதையும், கட்டாய, நியாயமற்ற மற்றும் சட்டவிரோதமான முறையில் பணத்தை வசூலிக்கும் நடைமுறைகளைத் தடுப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த வலைத்தளம் பதிவு செய்தல், புதுப்பித்தல், தாக்கல் செய்தல் மற்றும் குறை தீர்த்தல் போன்ற சேவைகளை வழங்குகிறது.
இது விவசாயிகள், பெண்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் போன்ற கடன் பெறுபவர்களை சட்டவிரோதமாக நடந்துகொள்ளும் கந்துவட்டிக்காரர்களிடமிருந்து பாதுகாக்கிறது.
கட்டாய வசூல் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ₹5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப் படலாம்.