TNPSC Thervupettagam

தமிழ்நாடு கனிம நிறுவனம்

August 29 , 2026 15 days 120 0
  • 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு கனிம வள மேம்பாட்டுக் கழகம் (TNMRDC) என்ற புதிய பொதுத்துறை நிறுவனத்தை (PSU) தமிழ்நாடு அரசு அமைக்க உள்ளது.
  • இந்தப் புதிய பொதுத்துறை நிறுவனம் சுரங்கப் பணி, கனிமங்களை வெட்டியெடுத்தல், தரத்தை மேம்படுத்துதல், இறக்குமதி, மதிப்பு கூட்டுதல், சந்தைப்படுத்துதல் மற்றும் கனிம விற்பனை ஆகியவற்றை மேற்கொள்ளும்.
  • நவீன டிஜிட்டல் உள்கட்டமைப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் கனிமங்கள் தொடர்பான செயல்பாடுகளை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும்.
  • ஆளில்லா விமான அமைப்பு (UAV) மற்றும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சட்டவிரோத சுரங்கங்களில் ஈடுபடும் பகுதிகளைக் கண்காணிப்பு பிரிவு கண்டறியும்.
  • குண்டுபெரும்பேடு மற்றும் வெள்ளறை ஏரிகளில் தாவர புதைபடிவப் பூங்கா அமைக்கப் படுவதுடன் இவை சுமார் 60 கோடி ஆண்டுகள் பழமையானவை என நம்பப்படுகிறது.
  • பொது-தனியார் கூட்டாண்மை (PPP) மாதிரியின் கீழ் கைவிடப்பட்ட சுரங்கங்கள் மற்றும் குவாரிகளில் சுரங்க சுற்றுலா மையங்களை அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை (DPR) மாநில அரசு தயாரிக்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்