தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்
April 23 , 2022 1168 days 738 0
இந்தியாவிலுள்ள 15 மாநில கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகங்களுள் தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக் கழகமானது முதலிடத்தினைப் பெற்றுள்ளது.
இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சமீபத்திய (2020) தர வரிசைப்பட்டியலில் இது தர நிலைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பல்கலைக்கழகமானது, நாட்டிலுள்ள வேளாண்மை, கால்நடை, தோட்டக்கலை மற்றும் மீன்வளப் பல்கலைக்கழகங்கள் அடங்கியப் பட்டியலில் 12வது இடத்தினைப் பெற்றுள்ளது.
2017 ஆம் ஆண்டில் 41வது இடத்தில் இருந்து இந்தப் பல்கலைக் கழகமானது 2020 ஆம் ஆண்டில் 12வது இடத்திற்கு முன்னேறியது ஒரு குறிப்பிடத்தக்கச் சாதனையாகும்.