தமிழ்நாடு காவல்துறையின் புதிய மற்றும் 30வது தலைமை இயக்குநர் (DGP)
July 1 , 2021 1506 days 916 0
டாக்டர் C. சைலேந்திரபாபு அவர்கள் தமிழ்நாடு காவல் துறையின் 30வது தலைமை இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இவர் 2021 ஆம் ஆண்டு ஜூலை 01 ஆம் தேதி முதல் பொறுப்பேற்க உள்ளார்.
இவர் இரண்டு ஆண்டுகள் என்ற ஒரு பதவிக் காலத்தை 2023 வரையில் வகிப்பார்.
காவல்துறையின் நடப்புத் தலைமை இயக்குநரான J.K. திரிபாதி அவர்கள் 2021 ஆம் ஆண்டு ஜுன் 30 ஆம் தேதியன்று ஓய்வு பெற்றார்.
சைலேந்திரபாபு இதற்கு முன்பு தமிழக இரயில்வே காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றினார்.
மேலும் இவர் தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தற்போதைய டிஜிபி திரிபாதி, உள்துறைச் செயலாளர் பிரபாகர் மற்றும் தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோருடனான ஒரு ஆலோசனைக்குப் பிறகு சைலேந்திரபாபுவின் பெயரை அறிவித்தார்.