TNPSC Thervupettagam

தமிழ்நாடு கிராமப்புற அமைப்புகளுக்கு மானியங்கள்

September 20 , 2025 2 days 29 0
  • 2025–26 ஆம் நிதியாண்டிற்கான ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மானியத்தின் முதல் தவணையாக தமிழகத்திற்கு 127.586 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கி உள்ளது.
  • இந்தத் தொகையானது, பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்குப் பதினைந்தாவது நிதி ஆணைய மானியத்தினால் பரிந்துரைக்கப்பட்ட நிதியின் ஒரு பகுதியாகும்.
  • மானியங்கள் தமிழ்நாட்டில் தகுதியான 2,901 கிராமப் பஞ்சாயத்துகள், தகுதியான 74 தொகுதி பஞ்சாயத்துகள் மற்றும் தகுதியான ஒன்பது மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு வழங்கப்பட்டது.
  • பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் மற்றும் ஜல் சக்தி அமைச்சகம் ஆனது நிதி அமைச்சகத்திடம் மானியங்கள் குறித்த பரிந்துரைகளை வழங்குகின்றன.
  • இந்த மானியங்கள் நிதி அமைச்சகத்தால் ஒரு நிதியாண்டில் இரண்டு தவணைகளாக வெளியிடப்படுகின்றன.
  • ஒருங்கிணைக்கப்பட்ட மானியங்கள் ஆனது அரசியலமைப்பின் பதினொன்றாவது அட்டவணையில் பட்டியலிடப் பட்டுள்ள 29 பிரிவுகளின் கீழ் இடம் சார்ந்தத் தேவைகளுக்காக கட்டமைக்கப்படுகின்றன.
  • இந்த மானியங்களைச் சம்பளம் அல்லது பிற நிறுவன தொடர்பான செலவுகளுக்குப் பயன்படுத்த முடியாது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்