TNPSC Thervupettagam

தமிழ்நாடு கூட்டுறவுத் துறை சீர்திருத்தங்கள்

August 22 , 2026 2 days 90 0
  • புதிய மாநில கூட்டுறவுக் கொள்கை மற்றும் நலவாழ்வு மற்றும் வணிக முயற்சிகள் உட்பட கூட்டுறவுத் துறைக்கான பல நடவடிக்கைகளை 2026 ஆம் ஆண்டு மாநில பட்ஜெட்டில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. வி. காந்திராஜ் அறிவித்தார்.
  • கூட்டுறவு நிறுவனங்களை மக்கள் மையமான, வெளிப்படையான, பொருளாதார ரீதியாக நிலையான மற்றும் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றுவதற்கு தமிழ்நாடு ஒரு மாநில கூட்டுறவுக் கொள்கையை உருவாக்கும்.
  • பெண்களை தொழில்முனைவோராக ஊக்குவிக்கும் வகையில் சுமார் ₹7,015 கோடி ஒதுக்கீட்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 'சிங்கப் பெண்கள் கடன் திட்டம்' செயல் படுத்தப் படும்.
  • விவசாயம் சார்ந்த தொழில்களைத் தொடங்குவதற்கு விவசாயிகளுக்கு 9% வட்டியில் கிராமப்புற வணிகக் கடன்கள் வழங்கப்படும் என்பதோடு இந்த முன்னெடுப்பிற்கு ₹5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கூட்டுறவு சங்கங்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் தரம், சந்தைப்படுத்தல், சந்தைப் பங்கு மற்றும் லாபத்தை மேம்படுத்த ‘வெற்றி’ என்ற பொதுவான வணிக முத்திரை அறிமுகப்படுத்தப்படும்.
  • வாடகை கட்டிடங்களில் இயங்கி வரும் பொது விநியோகத் திட்ட (PDS) நியாய விலைக் கடைகளுக்கு ₹15 கோடி செலவில் 150 நிரந்தரக் கட்டிடங்கள் கட்டப்படும்.
  • திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுகா ஆயக்குடி கிராமத்தில் 5,084 சதுர அடி நிலத்தில் ₹53 லட்சம் செலவில் புதிய வேளாண் விளைபொருள் ஏல மையம் அமைக்கப் படும்.
  • மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு சங்க வளாகங்களில் ₹50 லட்சம் செலவில் பெட்ரோல், டீசல் மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (CNG) நிரப்பும் நிலையங்கள் அமைக்கப்படும்.
  • 80 கூட்டுறவு உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் ₹25 லட்சம் மதிப்பீட்டில் மின்-ஏல முறைகள் அறிமுகப்படுத்தப்படும்.
  • புதிதாக அமைக்கப்பட்டுள்ள 105 நியாயவிலைக் கடைகளுக்கு விற்பனையாளர்களை நியமிப்பதில் பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
  • தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் (TANFED) மூலம் விவசாயிகளுக்கு வழங்கப் படும் உரங்கள் மற்றும் விதைகளின் விற்பனை தற்போதைய ₹898 கோடியிலிருந்து ₹2,500 கோடியாக உயர்த்தப்படும்.
  • வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதற்காக, முதல் கட்டமாக 100 நியாயவிலைக் கடைகளில் ₹20 லட்சம் மதிப்பீட்டில் இருப்பு விவரங்களைக் காண்பிக்க ஒளி உமிழ் இருமுனைய (LED) பலகைகள் நிறுவப்படும்.
  • அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு ₹2 கோடி செலவில் நிகழ்நேர வாகனக் கண்காணிப்பு அமைப்பு அறிமுகப்படுத்தப்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்