தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் நலத் திட்டம் 1994 - திருத்தம்
February 18 , 2019 2496 days 1065 0
தமிழ்நாடு கூலித் தொழிலாளர்கள் (கட்டுமானத் தொழிலாளர்கள்) நலத் திட்டம் 1994-ல் ஒரு திருத்தம் செய்வதன் மூலம் நகரத்தில் உள்ள பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் அம்மா உணவகத்தில் உணவை இலவசமாகப் பெற முடியும் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப் படவிருக்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியிலிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் விநியோகத் துறையானது இதற்கான ஒரு அரசாணையைப் பிறப்பிக்கவிருக்கிறது.
இத்திட்டமானது தொழிலாளர்கள் தங்களுக்குத் தேவையான உணவை இலவசமாகப் பெற அனுமதிக்கிறது. மேலும் அவர்களின் மாதச் செலவானது உணவகங்களினால் பராமரிக்கப்படும்.
இந்த செலவினங்கள் அந்த உணவகங்களுக்கு தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தினால் (TNCWWD - Tamil Nadu Construction Workers Welfare Board) செலுத்தப்படும்.