TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகர்

May 14 , 2026 16 hrs 0 min 4 0
  • தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த ஜே. சி. டி. பிரபாகர், 2026 ஆம் ஆண்டு மே 12 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையின் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • சபாநாயகர் பொறுப்பேற்ற பிறகு நடத்திய துணைச் சபாநாயகர் தேர்தலில், ரவிசங்கர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
  • அவைத் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இணைந்து சபாநாயகரை அவரது இருக்கைக்கு அழைத்துச் செல்லும் பாரம்பரியம், ஐக்கியப் பேரரசின் (UK) நாடாளுமன்ற முறையிலிருந்து உருவானது என்று முதல்வர் விஜய் நினைவு கூர்ந்தார்.
  • கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகாமையில் (500 மீட்டருக்குள்) உள்ள 717 டாஸ்மாக் மதுபானக்கடைகளை இரண்டு வாரங்களுக்குள் மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
  • தமிழகம் முழுவதும் தற்போது 4,765 டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகள் செயல் பட்டு வருகின்றன.
  • 2026 ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி நடைபெற்ற சட்டப் பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் த.வெ.க சட்டமன்ற உறுப்பினரான ஆர். சீனிவாச சேதுபதி பங்கேற்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
  • திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புத்தூர் ஆகிய தொகுதிகளின் பெயர்கள் மற்றும் எழுத்துக்கூட்டுகள் ஒரே மாதிரியாக இருப்பதால் தேர்தலில் குழப்பம் ஏற்பட்டதாகத் தொடரப்பட்ட மனுவின் அடிப்படையில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்