தமிழ்நாடு சட்டப்பேரவையில் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்
September 10 , 2026 3 days 83 0
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 அன்று நகர ஊரமைப்பு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடர்பான சட்டத் திருத்தங்கள் உட்பட 11 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) மசோதா, 2026 ஆனது, குறைந்தபட்ச நிலத் தேவையை பெருநகர சென்னை மாநகராட்சியில் 100 ஏக்கரிலிருந்து 12 ஏக்கராகவும், பிற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 18 ஏக்கராகவும், பிற பகுதிகளில் 25 ஏக்கராகவும் குறைக்கிறது.
மேலும் இது நிரந்தர வைப்பு நிதியை ₹50 கோடியிலிருந்து ₹25 கோடியாகக் குறைக்கிறது.
தமிழ்நாடு நகர ஊரமைப்பு (திருத்தச்) மசோதா, 2026 ஆனது, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்குப் பதிலாக நகர வளர்ச்சி குழுமங்களுக்கு முழுநேரத் தலைவரை நியமிக்க வகை செய்கிறது.
வேளாண் விளைபொருள் சந்தைப்படுத்துதல் (முறைப்படுத்துதல்) இரண்டாவது திருத்தச் மசோதா, 2026 ஆனது, வியாபாரிகளின் மண்டி உரிமச் செல்லுபடியாகும் காலத்தை 3 ஆண்டிலிருந்து 5 ஆண்டுகளாக உயர்த்துகிறது மற்றும் உரிம விண்ணப்பங்களை இணைய வழியாக்குகிறது.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள், ஊராட்சிகள், வணிக வசதியாக்கம், மதிப்புக்கூட்டப்பட்ட வரி (VAT) மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (GST) ஆகியவற்றிற்கான TNPSC நியமனங்கள் தொடர்பான திருத்தங்களுக்கும் பேரவை ஒப்புதல் அளித்தது.