TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டமன்ற மசோதாக்களின் நிலை

November 10 , 2025 25 days 101 0
  • பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகளுக்கு முரணாகக் கண்டறியப் பட்ட 10 மசோதாக்களை இந்தியக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக தமிழக ஆளுநர் ஒதுக்கியுள்ளார்.
  • 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி வரையில், இந்த மாநிலச் சட்டமன்றத்திலிருந்து ஆளுநர் 211 மசோதாக்களைப் பெற்றார்.
  • இவற்றில், 170 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன, 27 மசோதாக்கள் இந்தியக் குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்டன, 4 மசோதாக்கள் அவரது கருத்துகளுடன் திருப்பி அனுப்பப்பட்டன, மேலும் 2 மசோதாக்கள் மாநில அரசால் திரும்பப் பெறப்பட்டன.
  • பெறப்பட்ட மசோதாக்களில் 81% மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாகவும், 73 மசோதாக்கள் ஒரு வாரத்திற்குள்ளும் மற்றும் 61 மசோதாக்கள் ஒரு மாதத்திற்குள்ளும் நிறைவேற்றப் பட்டதாகவும் இராஜ்பவன் தெரிவித்துள்ளது.
  • சட்டமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க தாமதப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து இந்த விளக்கம் வெளியிடப் பட்டது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்