TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் 2026

February 24 , 2026 2 days 62 0
  • தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் பிப்ரவரி 20, 2026 அன்று நிறைவடைந்தது.
  • தற்போதைய திராவிட முன்னேற்றக் கழக (திமுக) அரசாங்கத்தின் இறுதிக் கூட்டத் தொடர் பிப்ரவரி 17, 2026 அன்று தொடங்கியது.
  • நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாநிலத்திற்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
  • வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இடைக்கால வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
  • பிப்ரவரி 20 அன்று, சட்டமன்றம் 2026–2027 ஆம் ஆண்டிற்கான முன்கூட்டிய மானியக் கோரிக்கை மற்றும் 2025–2026 ஆம் ஆண்டிற்கான கூடுதல் செலவினங்கள் குறித்து விவாதித்தது.
  • தமிழ்நாட்டில் 2026 கோடையில் பொதுத் தேர்தலை நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்