TNPSC Thervupettagam

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் 2026

May 6 , 2026 88 days 245 0
  • தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
  • மொத்தம் உள்ள 234 இடங்களில் பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சியும் முழு பெரும்பான்மையைப் பெறாததால், தொங்கு சட்டமன்றம் ஏற்பட்டுள்ளது.
  • ஜோசப் சி. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலை எதிர்கொண்ட நிலையில் அவர் பெரம்பூர் மற்றும் திருச்சிராப்பள்ளி (கிழக்கு) ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.
  • திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) 73 இடங்களையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) 53 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
  • இத்தேர்தலில் த.வெ.க, திமுக மற்றும் அதிமுக இடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில், மாநிலத்தில் நீண்ட காலமாக இருந்து வந்த இரு-கட்சி ஆதிக்கத்தை இது உடைத்துள்ளது.
  • இந்திய தேசிய காங்கிரஸ் (INC), பாட்டாளி மக்கள் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் பிற சிறிய கட்சிகள் குறைந்த இடங்களை வைத்துள்ளன என்ற நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய ஆதரவில் இவை முக்கியப் பங்கு வகிக்கக் கூடும்.
  • தமிழ்நாடு இதுவரை இல்லாத அளவில் 85.1% வாக்குப்பதிவைப் பதிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்