முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் காப்பீட்டுத் தொகையை தமிழ்நாடு அரசு ₹5 லட்சத்தில் இருந்து ₹25 லட்சமாக உயர்த்தி உள்ளது.
திருநங்கைகளுக்கான மருத்துவச் சேவைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் வழங்கப்படும்.
இம்மருத்துவமனைகள் திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கல்பட்டு, திருவாரூர், தர்மபுரி மற்றும் கன்னியாகுமரி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
பெரம்பூரில் ₹300 கோடி செலவில் 400 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்படும்.
முதலமைச்சரின் புற்றுநோய் பராமரிப்புத் திட்டம் ₹673.44 கோடி செலவில் மேம்படுத்தப் படும்.
₹351 கோடி செலவில் ஏழு செவிலியர் கல்லூரிகள் மற்றும் செவிலியர், மருந்தியல் மற்றும் துணை மருத்துவப் படிப்புகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும்.