1956 ஆம் ஆண்டில் மொழிவாரி மாநிலச் மறுசீரமைப்பிற்குப் பின்னர் ஆறு தசாப்தங்கள் கழித்து முதல்முறையாக, தமிழ்நாடு மாநில நிறுவன தினமானது நவம்பர் 1 அன்று கொண்டாடப் பட்டது.
1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 ஆனது 1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர், தமிழகம் என அழைக்கப்படும் தற்போதைய நிலப்பரப்பு முந்தைய மதராஸ் மாகாணத்திலிருந்துப் பிரிக்கப்பட்ட நாளைக் குறிக்கின்றது.
இந்த நிலப்பரப்பிற்கு மதராஸ் மாநிலம் என்று பெயரிடப் பட்டது.
ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக மறைந்த தமிழக முதல்வர் அறிஞர் அண்ணா, இந்த கோரிக்கைக்காக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பினார். இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பல தமிழ் அறிஞர்களும் அதற்காக குரல் கொடுத்தனர்.
1967 ஆம் ஆண்டில், அறிஞர் அண்ணா மாநில முதலமைச்சராக பதவியில் அமர்ந்தார்.
அதன் பின்னர் 1969 ஜனவரி 14 ஆம் தேதி முதல் மாநிலத்தின் பெயர் அதிகாரப் பூர்வமாக தமிழ்நாடு என்று பெயர் மாற்றப்பட்டது.