TNPSC Thervupettagam

தமிழ்நாடு திருநங்கைகள் கல்வி உதவித் தொகைத் திட்டம்

November 12 , 2026 2 days 82 0
  • தமிழ்நாட்டில் உள்ள 181 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2026–27 ஆம் கல்வியாண்டில் இளநிலை படிப்புகளில் 24 திருநங்கைகள் மட்டுமே சேர்ந்துள்ளனர்.
  • மொத்தம் அனுமதிக்கப்பட்ட 97,244 இளநிலை சேர்க்கைகளில், 24 பேர் மட்டுமே திருநங்கைகள் ஆவர்; முதுநிலை அளவில், 14,252 மாணவர்களில் 12 பேர் மட்டுமே திருநங்கைகள் ஆவர்.
  • சமூக அவமதிப்பு, நிதி நெருக்கடி, பள்ளி/கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்துதல் மற்றும் தங்குமிட வசதியின்மை போன்ற தடைகள் குறித்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் (TANSCHE) ஆய்வு செய்யவுள்ளது.
  • இந்த ஆய்வு, கல்வி உதவித்தொகைகள், இடஒதுக்கீட்டுக் கொள்கைகள், ஆலோசனைகள் மற்றும் வளாக உள்ளடக்கல் நடைமுறைகளை மதிப்பிடும்.
  • அரசு கல்லூரிகள் மற்றும் மாநிலப் பல்கலைக்கழகங்களில் படிக்கும் 50 திருநங்கைகளுக்குக் கல்வி மற்றும் வாழ்வாதாரச் செலவுகளுக்காக தலா ₹2 லட்சம் வழங்கும் முழு கல்வி உதவித்தொகைத் திட்டத்தை மாநில அரசு அறிவித்துள்ளது.
  • படிப்பை முடித்த திருநங்கைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், ஒரு வழிகாட்டுதல் திட்டத்தை அறிமுகப்படுத்தவும் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் திட்டமிட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்