TNPSC Thervupettagam

தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2031

August 24 , 2026 11 hrs 0 min 12 0
  • தமிழ்நாடு தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்கினை 2031 ஆம் ஆண்டிற்குள் 50% ஆக உயர்த்துவதற்கான 'தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம் 2031'-ஐ அறிவித்துள்ளது.
  • முக்கிய நகரப் பெருவழிகளுக்கு முன்னுரிமை அளித்து 20,000 மின்சார வாகன (EV) மின்னேற்று நிலையங்களை அமைப்பது இத்திட்டத்தில் அடங்கும்.
  • 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத நிலவரப்படி, தமிழ்நாடு 5.50 லட்சம் பதிவு செய்யப்பட்ட மின்சார வாகனங்களையும் 2,425 மின்னேற்று நிலையங்களையும் கொண்டிருந்தது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஒருங்கிணைப்பை ஆதரிப்பதற்காக ஆறு நிலையங்கள் மூலம் 1,000 மெகாவாட்-மணி (MWh) மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை (BESS) மாநிலம் நிறுவும்.
  • திருத்தியமைக்கப்பட்ட விநியோகத் துறைத் திட்டத்தின் (RDSS) கீழ், திறன் அளவிகள் உட்பட ஒட்டுமொத்த தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை 10% ஆகக் குறைப்பதற்கான நடவடிக்கைகளுக்காக சுமார் ₹8,929.86 கோடி ஒப்புதல் அளிக்கப் பட்டு ள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்