TNPSC Thervupettagam

தமிழ்நாடு நீர்வள மசோதா, 2026

January 27 , 2026 10 hrs 0 min 29 0
  • தமிழ்நாடு சட்டமன்றம் 2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீர்வள (ஒழுங்குமுறை, மேலாண்மை மற்றும் பெருக்குதல்) மசோதாவினை ஜனவரி 24, 2026 அன்று நிறைவேற்றியது.
  • இந்த மசோதா தமிழ்நாடு நீர்வள மேலாண்மை ஆணையத்தின் (TNWRMA) அரசியலமைப்பை வழங்குகிறது.
  • இந்த மசோதா தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான நீர்வளங்களையும் ஒழுங்குபடுத்துதல், நிர்வகித்தல் மற்றும் மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ள்ளது.
  • தலைமைச் செயலாளர் அதன் தலைவராக இருப்பார் என்பதோடு மேலும் நீர்வளச் செயலாளர் TNWRMA ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக இருப்பார்.
  • இந்த ஆணையம் மாநில நீர் கொள்கை மற்றும் மாநில நீர்வள மேலாண்மை திட்டத்தைத் தயாரிக்கும்.
  • வணிக ரீதியான நீர் பயன்பாட்டிற்கான கட்டணங்களை நிர்ணயிக்கவும், அங்கீகரிக்கப் படாத நீர் எடுப்புக்கான அபராதங்களை விதிக்கவும் இது அதிகாரம் அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்