தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாடு 2025 – சென்னை
April 30 , 2025 17 hrs 0 min 4 0
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்கள் (MSME) துறையின் கீழ் உள்ள தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கத் திட்ட அமைப்பானது (StartupTN) இந்த உச்சி மாநாட்டினை ஏற்பாடு செய்தது.
இந்த உச்சி மாநாடானது, SRM அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக் கழக நிறுவனத்துடன் இணைந்து தி இந்து இதழால் நடத்தப்பட்டதோடு, Sify Technologies நிறுவனத்துடன் இணைந்து StartupTN அமைப்பினால் தொகுத்தும் வழங்கப்பட்டது.
StartupTN அமைப்பினால் கோயம்புத்தூரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு உலகளாவிய புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாட்டிற்கான” முத்திரை மற்றும் வலைதளத்தை துணை முதல்வர் வெளியிட்டார்.
திறன் வளங்களின் அடிப்படையில், ஆசியாவின் முதல் 10 பிராந்தியங்களில் தமிழ்நாடு மாநிலமும் ஒன்றாக உள்ளது.
நிதி ஆயோக் அமைப்பானது, அதன் வலுவான மிகப்பெரும் ஆற்றலின் பிரதிபலிப்பாக தமிழகத்தினைப் புத்தாக்கச் சூழல் அமைப்பிற்கான ஒரு முன்மாதிரியாக குறிப்பிட்டு உள்ளது.
சென்னை நகரமானது மென்பொருள் சேவைகளின் தலைநகரம் என்று அழைக்கப் படுகிறது.
2024 ஆம் ஆண்டு புத்தொழில் நிறுவனங்கள் அறிக்கையில் சென்னை 18வது இடத்தில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
பல நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக வளர்கின்றன, ஆனால் அவ்வாறு வளரும் போது சிறந்த நிர்வாக நடைமுறைகளைக் கற்பதில்லை என்பதால் புத்தொழில் நிறுவனங்கள் மூடப்படும் விகிதம் மிக அதிகமாக உள்ளது.
சென்னையில் துணிகர மூலதன சூழல் அமைப்பு இல்லை என்பது மற்றொரு முக்கியப் பிரச்சினையாக உள்ளது.
தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் புத்தாக்கத் திட்டம் (StartupTN) ஆனது, இந்த ஆண்டு கிராமம் தோறும் புத்தொழில் நிறுவனங்கள் (கிராமங்களில் புத்தொழில் நிறுவனங்களை நிறுவுதல்) என்ற திட்டத்தைத் தொடங்க உள்ளது.
இது உள்ளடக்கிய வகையிலான தொழில்முனைவு, கிராமப்புறப் புத்தாக்கம் மற்றும் நிலையான பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.
இந்தக் கொள்கையானது பாலின உள்ளடக்கம், சாதி உள்ளடக்கம் மற்றும் புவியியல் உள்ளடக்கம் ஆகிய மூன்று மிகவும் முக்கியமான உள்ளடக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.
2023 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசானது புத்தொழில் நிறுவனத்திற்கான இந்திய அரசின் ஒரு வரையறையை சிறிது மாற்றியமைக்கும் ஒரு கொள்கையை அறிமுகப் படுத்தியது.
மத்திய அரசானது, தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் குறைவான ஆண்டுகளே ஆன 100 கோடி ரூபாய்க்கும் குறைவான இலாபம் கொண்ட நிறுவனத்தினை ஒரு புத்தொழில் நிறுவனமாக வரையறுக்கிற அதே சமயத்தில், தமிழ்நாட்டின் கொள்கை இதற்கான வருவாய் வரம்பை 50 கோடி ரூபாயாக திருத்தியமைத்தது.