தமிழ்நாடு புத்தொழில் நிறுவனங்கள் உச்சி மாநாடு 2025
April 27 , 2025 3 days 68 0
2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு புத்தொழில் உச்சி மாநாடு ஆனது சமீபத்தில் நடத்தப் பட்டது.
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை, தமிழ்நாட்டில் 2,032 புத்தொழில் நிறுவனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன.
தற்போது, இந்த எண்ணிக்கையானது 10,800க்கும் அதிகமாக அதிகரித்துள்ளது.
இவற்றில் சுமார் 50% நிறுவனங்கள் பெண்களால் நிறுவப்பட்டவையாகும்.
இந்த நிதியாண்டில் தூத்துக்குடியில் ஒரு பிராந்தியப் புத்தாக்க மையமானது நிறுவப் படுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில், ஈரோடு, திருநெல்வேலி, ஓசூர், சேலம், கடலூர், தஞ்சாவூர் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் பிராந்தியப் புத்தாக்க மையங்கள் நிறுவப் பட்டுள்ளன.