TNPSC Thervupettagam

தமிழ்நாடு புற்றுநோய் பராமரிப்புத் திட்டம்

November 19 , 2026 13 hrs 0 min 52 0
  • கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கான எச்.பி.வி-டி.என்.ஏ (HPV-DNA) பரிசோதனையை முதற்கட்டமாக அதிக பாதிப்புள்ள ஐந்து மாவட்டங்களில் தமிழ்நாடு அறிமுகப்படுத்த உள்ளது.
  • முதற்கட்டமாக தருமபுரி, விழுப்புரம், திருவண்ணாமலை, பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் 1,24,215 பெண்களை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழ்நாடு புற்றுநோய் பராமரிப்பு திட்டத்தின் கீழ், தேசிய நலவாழ்வுக் குழுமம் (NHM), தமிழ்நாடு மூலமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • இந்தப் பரிசோதனை ஆரம்பத்தில் 35 வயதுடைய பெண்களை உள்ளடக்கும், மேலும் படிப்படியாக மற்ற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
  • எச்.பி.வி-டி.என்.ஏ பரிசோதனை என்பது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் அபாயத்தில் உள்ள பெண்களைக் கண்டறிய உலக சுகாதார அமைப்பால் (WHO) பரிந்துரைக்கப்பட்ட அதிக உணர்திறன் கொண்ட முதன்மைப் பரிசோதனை முறையாகும்.
  • உலக சுகாதார அமைப்பின் 90–70–90 இலக்குகளில், 35 மற்றும் 45 வயதிற்குள் 70% பெண்களுக்கு உயர் செயல்திறன் கொண்ட பரிசோதனை செய்வதும் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்