தாய்மார்கள் இறப்பு விகிதத்தைக் குறைப்பதில் தமிழ்நாட்டின் வெற்றிகரமான பொது சுகாதார மாதிரியைப் பற்றி ஆய்வு செய்ய உத்தரப் பிரதேச மாநில அரசு அதிகாரிகள் தமிழகத்திற்கு வருகை தந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் (MMR) சுமார் 140 ஆக உள்ள நிலையில், தமிழ்நாடு 35-40 என்ற மிகக் குறைந்த அளவு இறப்பு விகிதத்தைச் சாதனை அளவாக எட்டியுள்ளது.
இந்த வெற்றியானது வலுவான சுகாதாரக் கட்டமைப்பு, திறமையான சேவை வழங்கல் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டது.
மாவட்ட அளவிலான தணிக்கைகள், MMR கட்டளை மையங்கள், தரப்படுத்தப்பட்ட சிகிச்சை முறைகள் மற்றும் அதிக ஆபத்துள்ள கர்ப்பிணிப் பெண்களைக் தீவிரமாகக் கண்காணித்தல் ஆகியன இதன் முக்கிய அம்சங்களாகும்.
தேசிய சுகாதார இயக்கம் (NHM) மற்றும் தமிழ்நாடு சுகாதார அமைப்புத் திட்டம் (TNHSP) போன்ற நிறுவனங்கள் இந்தச் செயல்பாடுகளை மிக நன்கு ஒருங்கிணைத்து ஆதரிக்கின்றன.