தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையம் (கூடுதல் செயல்பாடுகள்) மசோதா, 2022
January 11 , 2022 1280 days 720 0
அரசின் துணை நிறுவனங்களின் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புத் தேர்வுகளை நடத்தச் செய்வதற்கு என்று தமிழ்நாடு பொதுப் பணித் தேர்வாணையத்திற்கு அதிகாரம் ஒன்றினை அளிப்பதற்கான மசோதாவினை தமிழக சட்டசபை நிறைவேற்றியது.
பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கழக நிறுவனங்களின் காலிப் பணியிடங்களை நிரப்புவதில் நிகழும் முறைகேடுகள் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையானது மேற்கொள்ளப்பட்டது.
இந்த மசோதாவின்படி, தமிழ்நாடு பொதுப்பணி தேர்வாணையமானது அரசின் கீழான பொதுத்துறை நிறுவனங்கள், கழக நிறுவனங்கள், சட்டப்பூர்வ அமைப்புகள் மற்றும் வாரியங்கள் போன்றவற்றில் உள்ள குறிப்பிட்ட காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்புச் செயல்முறையை மேற்கொள்ளும்.