TNPSC Thervupettagam

தமிழ்நாடு பொம்மை உற்பத்திக் கொள்கை 2025

December 10 , 2025 15 hrs 0 min 27 0
  • மதுரையில் நடைபெற்ற TN ரைசிங் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசானது 2025 ஆம் ஆண்டு பொம்மை உற்பத்திக் கொள்கையை அறிவித்தது.
  • உலகளாவிய பொம்மைச் சந்தை ஆனது 2024 ஆம் ஆண்டில் 180 பில்லியன் அமெரிக்க டாலர்களாக மதிப்பிடப்பட்டது என்பதோடு உலகளவில் இந்தியா ஒரு சதவீதத்திற்கும் குறைவான பங்கையே கொண்டுள்ளது.
  • இந்தக் கொள்கையானது, இந்தியாவில் 10 பெரிய பொம்மை நிறுவனங்களை அறிமுகம் செய்து ஒரு பொம்மை உற்பத்திப் பூங்காவை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • குறைந்தபட்சம் 50 வேலைவாய்ப்புகளுடன் 50 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகள் ஆனது மூலதன மானியம் மற்றும் வரி நிவாரணம் போன்ற சிறப்புச் சலுகைகளைப் பெறும்.
  • பொம்மை உற்பத்தி செய்யும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கு (MSME) 1.5 கோடி ரூபாய் வரை மானியங்கள், சம்பள ஆதரவு மற்றும் வட்டி திருப்பிச் செலுத்துதல் வசதிகள் கிடைக்கப் பெறும்.
  • இந்தக் கொள்கையானது STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) நுட்பம் சார்ந்தப் பொம்மைகள், மின்னணுப் பொம்மைகள், புதிர்கள் மற்றும் சூப்பர் ஹீரோ உருவங்கள் போன்ற புதிய யுக பொம்மைகளை ஆதரிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்