தமிழ்நாடு மாநிலம் 16% என்ற மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்து மற்ற மாநிலங்களை முந்தியது.
இந்த வளர்ச்சி குறித்த புள்ளி விவரத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) தெரிவித்துள்ளது.
‘இந்திய மாநிலங்கள் குறித்த புள்ளி விவரக் கையேடு, 2024-25’ என்ற அறிக்கையை ரிசர்வ் வங்கி வெளியிட்டது.
2021 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் 10.50 லட்சம் கோடி ரூபாயாக வளர்ச்சியடைந்தது.
தமிழ்நாட்டின் மொத்த GSDP மதிப்பு 31.19 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
மாநிலத்தின் தனிநபர் வருமானம் ஆண்டிற்கு 1.9 லட்சம் ரூபாயைத் தாண்டியது என்பதோடு இது ஒரு பெரிய பொருளாதார மைல்கல்லைக் குறிக்கிறது.
தற்போதைய விலையில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2023-24 ஆம் ஆண்டில் ரூ.26.88 லட்சம் கோடியிலிருந்து 2024-25 ஆம் ஆண்டில் ரூ.31.18 லட்சம் கோடியாக அதிகரித்து உள்ளது.
இந்த வகையில், தமிழ்நாடு மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தை விட மிக அதிகமாக இருந்தது.
கடந்த மூன்று ஆண்டுகளில் இது ஒரு நிலையான மேல்நோக்கிய போக்கைத் தொடர்கிறது என்பதோடு 2021-22 மற்றும் 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் தமிழ்நாடு 14.47 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மகாராஷ்டிரா, முழுமையான அடிப்படையில் மிகப்பெரிய மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டிருந்தாலும், தமிழ்நாட்டுடன் ஒப்பிடும் போது அது மெதுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கர்நாடகா நிலையான இரட்டை இலக்க செயல்திறனைக் கண்டது, ஆனால் விரிவாக்க வேகத்தின் அடிப்படையில் 2024-25 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டை விட பின்தங்கி இருந்தது.
உத்தரப் பிரதேசம் 2022-23 மற்றும் 2023-24 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் குறிப்பாக வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்தது, ஆனால் 2024-25 ஆம் ஆண்டில் அது மிக மிதமானது.
தனிநபர் வருமானத்தில் தமிழ்நாடு டெல்லி, தெலுங்கானா மற்றும் கர்நாடகாவை விட நான்காவது இடத்தில் உள்ளது.
தனிநபர் வருமானம் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.3,13,329 ஆக இருந்த நிலையில், 2024-25 ஆம் ஆண்டில் ரூ.3,61,619 ஆக கடுமையாக உயர்ந்துள்ளது.