TNPSC Thervupettagam

தமிழ்நாடு பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் 2025

June 26 , 2025 9 days 100 0
  • திமுக அரசாங்கமானது கடந்த ஆண்டில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கு 6,626 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • இதற்கு முந்தையதாக, அதிமுக ஆட்சியின் 10 ஆண்டுகளில், இந்தத் துறைக்கு ஒதுக்கப் பட்ட 3,617.62 கோடி ரூபாய் நிதியை விட இது கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகமாகும்.
  • தமிழ்நாட்டின் பெரும் பொருளாதாரத்திற்கு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களின் பங்களிப்பை நன்கு கருத்தில் கொண்டு, இந்த நிதியாண்டில் இந்தத் துறைக்கு 1,918.22 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சுமார் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட பதிவு செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுடன் தமிழ்நாடு மாநிலமானது இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • மகாராஷ்டிரா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகியவை தமிழ்நாட்டை விட முன்னணியில் உள்ளன.
  • இது 2.47 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
  • தமிழ்நாடு 30.50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஏற்றுமதியுடன் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
  • உற்பத்தித் துறையில், இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாட்டின் பங்களிப்பு 11.90% ஆகும்.
  • தற்போதைய அரசு 14 தொழிற்துறைப் பூங்காக்களை உருவாக்கியுள்ளது.
  • மோட்டார் வாகனங்கள், ஆயத்த ஆடைகள் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
  • ஜவுளி உற்பத்தி இயந்திரங்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் உற்பத்தியில் தமிழ் நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.
  • இந்தியாவில் உள்ள சுமார் 14.9 லட்சம் பெண் தொழிலாளர்களில், தமிழ்நாட்டில் மட்டும் 6.3 லட்சம் பெண்கள் தொழிலாளர் வளத்தில் உள்ளனர்.
  • இது மொத்தப் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 42% ஆகும் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தொழில்முனைவோரில் 30% பெண்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்