உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு மறுவரையறைப் பணிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப் பட வேண்டிய பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறித்து விவாதிக்க தமிழ்நாடு மறு வரையறை ஆணையம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியது.
இக்கூட்டம் சென்னையில் மாநிலத் தேர்தல் ஆணையர் பி. ஜோதி நிர்மலாசாமி தலைமையில் நடைபெற்றது.
பி. ஜோதி நிர்மலாசாமி அவர்கள் தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் தலைவராகவும் செயல்படுகிறார்.
11 மாவட்ட ஊராட்சிகள், 40 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 177 கிராம ஊராட்சிகளில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை நிர்ணயிப்பது குறித்து அதிகாரிகள் ஆலோசித்தனர்.
சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான வார்டு மறுவரையறை செயல் முறையை ஆணையம் ஆய்வு செய்தது.
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்து இந்த மாநில அரசுக்குப் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.