தமிழ்நாடு மற்றும் ACT நிறுவனத்திற்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்
October 4 , 2018 2595 days 933 0
100 பொது நூலகங்களுக்கு இலவச இணைய சேவையை வழங்குவதற்காக, தனியார் இணைய சேவை வழங்குநரான ACT பைபர் நெட் உடன் தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறையானது புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
சென்னை, கோயம்புத்தூர், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளின் நூலகங்களுக்கு இலவச இணைய வசதியை வழங்குவதற்காக தனது பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR – Corporate Social Responsibility) நிதியை ACT பயன்படுத்தவுள்ளது.